கோலாலம்பூர்; மலாயாவின் முன்னாள் தலைமை நீதிபதியும், இப் பதவியை வகித்த முதல் பெண்ணுமான டான்ஸ்ரீ சித்தி நோர்மா யாக்கோப், தனது 85 வயதில் காலமானார்.
அவரது மகன் மியோர் அம்ரி மியோர் அயோப் (56) இதை உறுதிப்படுத்தினார். நிமோனியா காரணமாக நேற்று மதியம் இங்குள்ள கேபிஜே அம்பாங் புத்ரி சிறப்பு மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை (மார்ச் 13) பிற்பகல் 1.51 மணிக்கு அவரது தாயார் காலமானதாக அவர் கூறினார்.
சித்தி நார்மா ஜூலை 6, 1940 அன்று சிரம்பானில் பிறந்தார், மேலும் இந் நாட்டில் உயர் நீதிமன்ற நீதிபதி, மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி மற்றும் கூட்டரசு நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்ட முதல் பெண் என்ற வரலாற்றையும் படைத்தவர் இவர்.
மேலும் இவர் 2008 ஆம் ஆண்டில் துபாய் அனைத்துலக நிதி மைய (DIFC) நீதிமன்றத்தில் சேர நியமிக்கப்பட்ட மலேசியாவின் முதல் பெண் நீதிபதி ஆவார்.




