மாநகரின் சாலை பராமரிப்புக்காக மத்திய அரசு நேரடியாக ஒதுக்கிய RM33 மில்லியன் நிதி, நகரத்தின் அதிக போக்குவரத்தை சமாளிக்க போதுமானதாக இல்லை என்று அமைச்சர் ஹன்னா யோ கூறினார்.
பிரதமர் துறை (கூட்டஅரசு பிரதேச அமைச்சர், தலைநகரின் சாலை வலையமைப்பின் சரியான பராமரிப்பை உறுதி செய்வதற்கு அதிக ஒதுக்கீடு அவசியம் என்று வலியுறுத்தினார் .
தேசிய சாலை பராமரிப்பு நிதியான மலேசியா சாலை பதிவு தகவல் அமைப்பு (மாரிஸ்) மூலம் ஆண்டுதோறும் ஒதுக்கீடுகளைப் பெறும் பிற மாநிலங்களைப் போலல்லாமல், கோலாலம்பூர் மிகக் குறைந்த நேரடி மானியத்தைப் பெறுகிறது.
“இது போதாது, ஏனெனில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான வாகனங்கள் நகரத்திற்குள் தினமும் நுழைகின்றன, இதனால் அதன் சாலைகளில் பெரும் அழுத்தம் ஏற்படுகிறது,சமீபத்திய தேசிய நிதி கவுன்சில் கூட்டத்தின் போது பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமிடம் இந்த விஷயத்தை எழுப்பியதாக யோ மேலும் கூறினார்.
கோலாலம்பூர் மேயர் டத்தோஸ்ரீ பத்லுன் மக் உஜுத் மற்றும் புக்கிட் பிந்தாங் நாடாளுமன்ற உறுப்பினர் போங் குய் லுன் ஆகியோருடன் புடுவில் உள்ள ஹாங் துவா பொது வீட்டுவசதி திட்டத்தில் சமீபத்தில் முடிக்கப்பட்ட சாலை மறுசீரமைப்பு பணிகளை ஆய்வு செய்த பின்னர் அவர் இந்தக் கருத்துக்களை தெரிவித்தார்.




