முல்தான், கிழக்கு பாகிஸ்தானிய கிராமத்தில் நேற்று பெண்கள் அரசாங்க நலத்திட்ட உதவிகளை சேகரிக்க கூடியிருந்தபோது ஒரு கடையின் கூரை இடிந்து விழுந்த்தில், குறைந்தது எட்டு பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 50 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் என்று காவல்துறை மற்றும் மீட்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.
கடைக்காரர் 100 க்கும் மேற்பட்ட பெண்களில் சிலரை கூரைக்கு மேலே செல்லச் சொன்னதால், மற்றவர்கள் கடைக்குள் இருந்தபோது கூரை கூட்டத்தின் எடையைத் தாங.காமல.சரிந்தது என்று மீட்புப் பணியாளர் ஆஷிக் மஹ்மூத் கூறினார்.




