கோலாலம்பூர், மார்ச் 17 – சட்டவிரோத வழிபாட்டு இல்லங்களுக்கு எதிரான இயக்கமான GARAH (Gerakan Anti Rumah Anutan Haram) ஒருங்கிணைப்பாளர் சம்ரி வினோத் கலிமுத்து, கடந்த பிப்ரவரி 3ஆம் தேதி தனது ஃபேஸ்புக் கணக்கில் வெளியிட்டதாகக் கூறப்படும் பதிவை தொடர்பாக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டில் தாம் குற்றமற்றவர் என தெரிவித்து, வழக்கை முழுமையான விசாரணைக்கு கொண்டு செல்லுமாறு நீதிமன்றத்தில் கோரிக்கை வைத்தார்.
இன்று காலை சுமார் 9.15 மணியளவில், சம்ரி வினோத் கோலாலம்பூர் நீதிமன்ற வளாகத்திற்கு வந்தடைந்தார். அவர் கைதடியில், மலேசிய அரசுப் போலீஸ் அதிகாரிகளின் பாதுகாப்புடன் நீதிமன்ற வளாகத்திற்குள் அழைத்துச் செல்லப்பட்டார்.
குற்றப்பத்திரிகையின் படி, அந்த ஃபேஸ்புக் பதிவு பொதுமக்களிடையே அச்சத்தையும் பதற்றத்தையும் ஏற்படுத்தக்கூடியதாகவும், மேலும் பொதுச் சாந்தியை பாதிக்கும் வகையிலான குற்றச்செயல்களை மேற்கொள்ள பிறரைத் தூண்டக்கூடிய தன்மையுடையதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.




