துருக்கிக்கு பயணம் மேற்கொண்டுள்ள கனடாவின் வெளியுறவு அமைச்சர் அனிதா ஆனந்த் கூறியதாவது:-
போர் குறித்து அமெரிக்கா எங்களிடம் கலந்தாலோசிக்கவில்லை. எந்தவொரு ராணுவ நடவடிக்கையிலும் பங்கேற்கும் எண்ணம் கனடாவிற்கு இல்லை.
எங்கள் வெளியுறவுக் கொள்கை பதற்றத்தைத் தணிப்பதிலும், பொதுமக்களைப் பாதுகாப்பதிலும், மனிதாபிமானத்திலும் கவனம் செலுத்துகிறது.
பதற்றத்தைத் தணிப்பதே மிக முக்கிய முன்னுரிமை ஆகும். பொதுமக்களின் உயிர்களின் நலனுக்காக மத்திய கிழக்கில் போர் முடிவுக்கு வர வேண்டும்..இவ்வாறு அவர் கூறினார்.




