Vimarsagan Media

Home » World » இந்தோனேசியாவின் மிகப் பணக்காரர் மைக்கேல் பாம்பாங் மரணம்

இந்தோனேசியாவின் மிகப் பணக்காரர் மைக்கேல் பாம்பாங் மரணம்

புகையிலை அதிபரும், இந்தோனேசியா வின் மிகப் பெரிய பணக்காரருமான மைக்கேல் பாம்பாங் ஹர்டோனோ தனது 86வது வயதில் காலமானார்.

.”எங்கள் நிறுவனத்தின் தலைவர்களில் ஒருவரான மைக்கேல் பாம்பாங் ஹார்டோனோவின் மறைவை, பி.டி. ஜாரும் நிறுவனத்தின் விரிவான குடும்பத்தினர் ஆழ்ந்த துக்கத்துடன் அறிவிக்கின்றனர்,” என்று அந்த அறிக்கை தெரிவித்தது. “அவரது அர்ப்பணிப்புக்கும் சேவைக்கும் எங்கள் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.”

அவரது மரணத்திற்கான காரணத்தை குடும்பத்தினர் வெளியிடவில்லை. அவர் இதற்கு முன்னர், நாள்பட்ட நுரையீரல் அடைப்பு நோய் மற்றும் மாரடைப்பால் பாதிக்கப்பட்டிருந்ததை ஒப்புக்கொண்டி ருந்தார்.

ஹார்டோனோவும் அவரது சகோதரர் ராபர்ட் புடி ஹார்டோனோவும், தங்களுக்கு மரபுரிமையாகக் கிடைத்த குடும்பத் தொழிலை, மத்திய ஜாவாவின் குடுஸ் ரீஜென்சியைத் தளமாகக் கொண்ட ஒரு பெருநிறுவனமாக வளர்த்தெடுத்தனர். இது வங்கித் துறை, பாமாயில் தோட்டங்கள், சொத்துக்கள், மின்னணுவியல், தொலைத்தொடர்பு மற்றும் ஒரு மின்-வணிகத் தளம் ஆகியவற்றில் இயங்குகிறது.

அவர்களின் முதன்மை நிறுவனமான பி.டி. ஜாரும், ஜாரும் பிளாக், ஜாரும் சூப்பர் மற்றும் எல்.ஏ. லைட்ஸ் உள்ளிட்ட டஜன் கணக்கான உள்நாட்டு மற்றும் அனைத்துலக பிராண்டுகளை, முதன்மையாக கிகரெட் அல்லது கிராம்பு சிகரெட்டு களைத் தயாரித்தது.

இந்த சகோதரர்கள், இந்தோனேசியா வின் மிகப்பெரிய வங்கியான பேங்க் சென்ட்ரல் ஆசியாவின் மிகப்பெரிய பங்குதாரர்களாகவும் உள்ளனர். அந்த வங்கி கடந்த ஆண்டு 57.5 டிரில்லியன் ரூபியா ($3.43 பில்லியன்) வருவாய் ஈட்டியது.

Scroll to Top