Vimarsagan Media

Home » Malaysia » முஸ்லிம்- இந்து அமைப்புகளின் முயற்சி பிரதமர் அன்வார் பாராட்டு

முஸ்லிம்- இந்து அமைப்புகளின் முயற்சி பிரதமர் அன்வார் பாராட்டு

மலாய், இந்தியச் சமூகங்களைச் சேர்ந்த தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் இணைந்து மேற்கொண்டுள்ள சமூக முயற்சியானது அமைதி வழியைத் தேர்ந்தெடுப்பதில் மக்கள் கொண்டுள்ள நல்லெண்ணத்தை வெளிப்படுத்துவதாக உள்ளது என்று பிரதமர் அன்வார் இப்ராஹிம் பாராட்டியுள்ளார்.

பிரிவினையைப் புறந்தள்ளி, இருதரப்பினரும் ஒருவர்மீது ஒருவர் கொண்டுள்ள மரியாதையை உயர்த்திப் பிடிக்கும் முயற்சி இது என்று தமது முகநூல் பக்கத்தில் பிரதமர் பதிவிட்டு ள்ளார்.

“பணிவன்பு, ஒற்றுமை, இனங்களுக்கு இடையிலான மரியாதை ஆகிய விழுமியங்களில் உறுதியாக நிற்கும் மலேசியாவின் உண்மையான ஆன்மாவை இது வெளிப்படுத்துகிறது.

“நாட்டின் வலிமைக்கு அடித்தளமாக விளங்கும் இந்த ஒற்றுமையை நாம் தொடர்ந்து போற்றிப் பாதுகாக்க வேண்டும்,” என்று அவர் தமது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

Scroll to Top