Vimarsagan Media

Home » Malaysia » வாக்குவாதம் வன்முறையாக மாறி கை மற்றும் மார்பில் துப்பாக்கிச் சூடு

வாக்குவாதம் வன்முறையாக மாறி கை மற்றும் மார்பில் துப்பாக்கிச் சூடு

பாடாங் செராய் பகுதியில் நேற்று இரவு ஏற்பட்ட வாக்குவாதம் வன்முறையாக மாறியதைத் தொடர்ந்து, 24 வயதான தொழிற்சாலை ஊழியர் ஒருவருக்கு கை மற்றும் மார்பில் துப்பாக்கிக் காயங்கள் ஏற்பட்டன.

இந்தச் சம்பவம், செபெராங் பாயாவில் உள்ள காம்பங் பெர்மாடாங் டுரியான் என்ற இடத்தில் ஒரு வீட்டிற்கு வெளியே இரவு 11.50 மணிக்கு நடந்தேறியது கூலிம் துணை காவல் தலைவர், துணை கண்காணிப்பாளர் தெங்கு முகமது ஃபைசல் தெங்கு யெங் கூறுகையில், காம்போங் நாகா லிலிட்டில் உள்ள தனது வீட்டிற்கு வருமாறு முன்னதாகக் கேட்டிருந்த 42 வயதான நபர், பாதிக்கப்பட்டவரை வழிமறித்தபோது இந்த மோதல் தொடங்கியது என்றார்.

“பின்னர் சந்தேக நபர் ஒரு ரிவால்வரி லிருந்து ஒரு முறை சுட்டார், அதில் பாதிக்கப்பட்டவரின் வலது கை மற்றும் மார்பில் குண்டு பாய்ந்தது,” என்று அவரைத் தொடர்புகொண்டபோது கூறினார்.

பாதிக்கப்பட்டவர் சிகிச்சைக்காக குலிம் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.பின்னர், சந்தேக நபரான லாரி ஓட்டுநரை, காம்பங் நாகா லிலிட்டில் அவரது வீட்டிற்கு முன்பாக வைத்து காவல்துறை கைது செய்தது.

கைது நடவடிக்கையின் போது, ​​ஒரு கைத்துப்பாக்கி, 10 தோட்டாக்கள், இரண்டு பயன்படுத்தப்பட்ட தோட்டா உறைகள் மற்றும் துப்பாக்கிச் சூட்டுடன் தொடர்புடையதாக நம்பப்படும் ஒரு ஹோண்டா சிவிக் கார் ஆகியவை கைப்பற்றப்பட்டன. விசாரணையில், சந்தேக நபர் மற்றும் பாதிக்கப்பட்டவர் இருவருக்கும் முந்தைய குற்றப் பின்னணி இருப்பது தெரியவந்தது

Scroll to Top