தென்கொரியாவிலுள்ள டேஜியோனில் ஒரு கார் உதிரிபாகத் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் பதினான்கு பேர் உயிரிழந்தனர் மற்றும் 25 பேர் படுகாயம் அடைந்தனர் என்று தீயணைப்பு அதிகாரி கள் தெரிவித்தனர்.
வெள்ளிக்கிழமை மதிய உணவு நேரத்தில் தீ விபத்து ஏற்பட்டதாகவும், இரவு 11.48 மணிக்கு தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாகவும் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. மேலும் 35 பேர் லேசான காயங்களுடன் தப்பினர் என்றும் தீயணைப்பு அதிகாரி கள் தெரிவித்தனர்.
அந்தத் தொழிற்சாலை, என்ஜின் வால்வுகளைத் தயாரிக்கும் அன்ஜுன் இண்டஸ்ட்ரியல் நிறுவனத்திற்குச் சொந்தமானது என்றும், அதன் இணையதளத்தின்படி ஹூண்டாய் மோட்டார் மற்றும் கியா கார்ப் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு அது ஒரு விநியோகஸ்தராக உள்ளது என்றும் அவர்கள் கூறினர்.
நிறுவனத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்ட ஓர் அறிக்கையில், தலைமைச் செயல் அதிகாரி சோன் ஜூ-ஹ்வான் மன்னிப்புக் கோரியதோடு, அதிகாரிகள் மற்றும் நிறுவனத்தின் பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் ஆய்வுகளை முழுமையாக ஒத்துழைத்து, விபத்துக்கான காரணத்தை விசாரித்து, தேவையான அனைத்து நடவடிக்கை களையும் மறுபரிசீலனை செய்து, இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் தடுக்க விரைவாகச் செயல் படுத்தப்படும் என்றும் தெரிவித்தார்.




