சுங்கைப்பட்டாணியில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட தம்பதியினர் தலை துண்டிக்கப்பட்டு, உடல் சிதைக்கப் பட்டிருந்தனர் என காவல்துறையினர் கூறுகின்றனர் மகனின் உடலுக்கு அருகில் இருந்த ஒரு கொள்கலனில் பல கூர்மையான ஆயுதங்கள் கண்டெடுக்கப்பட்டன அந்த 29 வயது மகனின் உடல், கழுத்தில் வெட்டுக் காயங்களுடன் மாடியில் உள்ள படுக்கையறையில் கண்டெடுக்கப் பட்டதாக ஹன்யான் கூறினார்.
அவ் வீட்டில் முன்பு வசித்து வந்த தம்பதியினர் மூன்று நாட்களாகக் காணப்படவில்லை என்றும், அப்பகுதியில் இருந்து துர்நாற்றம் வீசுவதாகவும் பொதுமக்க ளிடமிருந்து காவல்துறைக்குத் தகவல் கிடைத்தது.
“நாங்கள் வீட்டிற்குள் வலுக்கட்டாயமாக நுழைந்து, சமையலறைப் பகுதியில் கணவன், மனைவி ஆகிய இருவரின் உடல்கள் சுற்றப்பட்டு மூடப்பட்ட நிலையில் இருப்பதைக் கண்டோம்,” என்று அவர் கூறினார்.
உடல்கள் வீங்கி, அழுகிய நிலையில் இருந்ததாலும், அவற்றின் நிலையைக் கொண்டு தம்பதியினர் 48 மணி நேரத்திற்கும் மேலாக இறந்திருக்கலாம் என்று நம்பப்படுவதாகவும், அதே சமயம் மகன் சமீபத்தில் இறந்திருக்கலாம் எனத் தோன்றியதாகவும் அவர் கூறினார்.
முதற்கட்ட விசாரணையில், மகனுக்கு மனநலப் பிரச்சினைகள் இருந்திருக் கலாம் என்று நம்பப்படுவது தெரிய வந்துள்ளது. உடல்கள் பிரேதப் பரிசோதனைக்காக அலோர் ஸ்டாரில் உள்ள சுல்தானா பஹியா மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டன.இந்த வழக்கு, தண்டனைச் சட்டத்தின் பிரிவு 302-இன் கீழ் கொலை வழக்காக விசாரிக்கப்பட்டு வருகிறது.




