Vimarsagan Media

Home » Malaysia » பத்து கேவ்ஸ்-புலாவ் செபாங் மின்சார ரயில் சேவை மீண்டும் தொடக்கம்

பத்து கேவ்ஸ்-புலாவ் செபாங் மின்சார ரயில் சேவை மீண்டும் தொடக்கம்

மேல்நிலை மின்பாதை உபகரணங்களில் (ATA) ஏற்பட்ட சேதத்தால் முன்னதாக ஏற்பட்ட தடங்கல்களைத் தொடர்ந்து, பத்து கேவ்ஸ்-புலாவ் செபாங்-பத்து கேவ்ஸ் வழித்தடத்தில் மின்சார ரயில் சேவை (ETS) மற்றும் KTM கொம்யூட்டர் சேவைகள் முழுமையாக மீண்டும் தொடங்கப்பட்டுள்ளதாக கெரெட்டாபி தானா மலாயு பெர்ஹாட் அறிவித்து உள்ளது.

(மார்ச் 26) அன்று வெளியிடப்பட்ட ஓர் அறிக்கையில், பத்தாங் பெனார் மற்றும் லாபு நிலையங்களுக்கு இடையேயான கி.மீ 434.423-ல் உள்ள மின்மயமாக்கல் அமைப்பில் மேற்கொள்ளப்பட்ட பழுதுபார்க்கும் பணிகள் அன்றைய தினம் அதிகாலை 3.56 மணிக்கு நிறைவடைந்ததாக கேடிஎம்பி தெரிவித்துள்ளது.

“தடை ஏற்பட்டிருந்த காலம் முழுவதும், பயணிகளின் பாதுகாப்பு மற்றும் நலனை உறுதி செய்வதற்காக, மாற்றுப் பேருந்துகளை வழங்குதல் மற்றும் களப்பணியாளர்களின் உதவி மூலம் சிக்கித் தவித்த பயணிகளைக் கையாளுதல் உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன,” என்று அந்த அறிக்கை கூறியது.

Scroll to Top