Vimarsagan Media

Home » Malaysia » வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸைத் தாண்டினால், பள்ளிகள் மூட படலாம்

வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸைத் தாண்டினால், பள்ளிகள் மூட படலாம்

தொடர்ந்து மூன்று நாட்களுக்கு வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸைத் தாண்டினால், பள்ளிகளை மூடுவதற்கு நிர்வாகிகளுக்கு அனுமதி உண்டு என துணை கல்வி அமைச்சர் வோங் கா வோ கூறினார்.

2023-ஆம் ஆண்டு முதல் கல்வி அமைச்சகத்தால் (MOE) வகுக்கப்பட்ட வழிகாட்டுதல்களில் இதுவும் ஒன்றாகும் என்றும், வெப்பமான மற்றும் வறண்ட வானிலை மோசமடைந்தால் இது செயல்படுத்தப்படலாம் என்றும் அவர் கூறினார்.

“குழந்தைகளின் வசதியையும் ஆரோக்கியத்தையும் உறுதி செய்வது கல்வி அமைச்சகத்திற்கு ஒரு சவால்தான் என்பதை நாங்கள் அறிவோம்,” என்று இன்று இங்குள்ள கோப்பெங் தமிழ் தேசிய வகைப்பள்ளியை (SJKT) பார்வையிட்ட பிறகு செய்தியாளர்களிடம் அவர் கூறினார்.

பேராக் மனிதவளம், சுகாதாரம், இந்திய சமூக விவகாரங்கள் மற்றும் தேசிய ஒருமைப்பாட்டுக் குழுவின் தலைவர் டத்தோ ஏ. சிவனேசன் மற்றும் மாநில வீட்டுவசதி மற்றும் உள்ளாட்சி மன்றக் குழுவின் தலைவர் சாண்ட்ரியா என்ஜி ஷை சிங் ஆகியோரும் உடனிருந்தனர்.

அதுமட்டுமின்றி, தொடர்ந்து மூன்று நாட்களுக்கு வெப்பநிலை 35 முதல் 37 டிகிரி செல்சியஸைத் தாண்டினால், பள்ளிகளில் உள்ள அனைத்து வெளிப்புற நடவடிக்கைகளும் தற்காலிகமாக நிறுத்தப்பட வேண்டும் என்றும் வோங் கூறினார்.

Scroll to Top