Vimarsagan Media

Home » Malaysia » மூக்கை குடைத்த சிறுவனுக்கு அறை கை நீட்டியவர் கம்பிக்குள் சிறை !

மூக்கை குடைத்த சிறுவனுக்கு அறை கை நீட்டியவர் கம்பிக்குள் சிறை !

பாசார் செனி எல்.ஆர்.டி நிலையத்தில், ஒரு பதின்வயது சிறுவன் மூக்கைக் குடைந்ததால் கோபமடைந்து அவனை அறைந்ததாக சந்தேகிக்கப்படும் 40 வயது மதிக்கத்தக்க நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

கைதான நபர் பிற்பகல் சுமார் 3:40 மணியளவில் டாங் வாங்கி காவல் வைக்கப்பட்டதாக நிலையத் தலைவர் சசாலீ ஆடம் கூறினார்.

“வரிசையில் காத்திருந்தபோது சிறுவன் மூக்கைக் குடைந்ததால் ஏற்பட்ட கோபத்தில், பாதிக்கப்பட்டவரை அறைந்ததாக சந்தேக நபர் ஒப்புக் கொண்டார்.”

இந்தச் சம்பவத்தின்போது அணிந்திரு ந்ததாக நம்பப்படும் ஆடைகளையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். அந்த நபரை காவலில் வைக்க நீதிமன்றக் காவல் உத்தரவு கோரப்படும்.

இவ்வாரத் தொடக்கத்தில், ஒரு பதின்வயது சிறுவன் அறையப்பட்டதில் முகத்தில் லேசான காயங்கள் அடைந்தான். இந்தத் தாக்குதல் காணொளியில் பதிவு செய்யப்பட்டு, பின்னர் வைரலாகப் பரவியது. பாதிக்கப்பட்ட 13 வயது சிறுவன், பிற்பகல் 1.30 மணியளவில் ஒரு ரொட்டிபாய் கடைக்கு முன்னால் வரிசையில் நின்றுகொண்டிருந்தபோது இந்தச் சம்பவம் நிகழ்ந்தது.

Scroll to Top