Vimarsagan Media

Home » Malaysia » 25% முதல் 28% வரை பேருந்து நடத்துனர் கட்டணங்கள் உயர்த்த உத்தேசம்

25% முதல் 28% வரை பேருந்து நடத்துனர் கட்டணங்கள் உயர்த்த உத்தேசம்

டீசல் விலையில் ஏற்பட்ட கடுமையான உயர்வைத் தொடர்ந்து, இத்துறையில் செலவு நெருக்கடிகள் தீவிரமடைந்து வருவதால், தொழிற்சாலை பேருந்து நடத்துநர்கள் கட்டணங்களை 28% வரை உயர்த்த உள்ளனர்.

ஆறு வாரங்களுக்குள் டீசல் விலை கிட்டத்தட்ட 85% உயர்ந்துள்ளதாகவும், இதனால் நடத்துநர்கள் தற்போதைய ஒப்பந்தங்களில் 25% முதல் 28% வரை தற்காலிக கட்டண உயர்வை அமல்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளதாகவும் மலேசிய தொழிலாளர் பேருந்து நடத்துநர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

200 லிட்டர் தொட்டியை நிரப்புவதற்கான செலவு RM598-லிருந்து RM1,104 ஆக உயர்ந்துள்ளதாக அதன் தலைவர் ஜாக்கி சூ கூறினார். “எங்கள் ஒப்பந்தங்களில் பெரும்பாலான வை நிலையான மற்றும் நீண்ட கால ஒப்பந்தங்கள் என்பதால், எங்களால் உடனடியாக இந்தச் செலவை வாடிக்கையாளர்களிடம் சுமத்த முடியாது. நடத்துநர்கள் பெரும் நஷ்டத்தைச் சந்தித்து வருகின்றனர்,” என்று அவர் கூறினார்.

கடந்த வாரம், மலேசிய நிதி அமைச்சு தீபகற்ப மலேசியாவில் டீசல் விலையை 80 சென் உயர்த்தியது, அதே நேரத்தில் RON97 மற்றும் மானியம் இல்லாத RON95 பெட்ரோல் விலை நாடு முழுவதும் 60 சென் உயர்ந்தது.

Scroll to Top