Vimarsagan Media

Home » Malaysia » ஏப்ரல் 15 முதல் வீட்டிலிருந்து பணி புரியும் கொள்கை அரசாங்கம் அமல்

ஏப்ரல் 15 முதல் வீட்டிலிருந்து பணி புரியும் கொள்கை அரசாங்கம் அமல்

அரசு ஊழியர்கள் மற்றும் அரசு சார்ந்த நிறுவனங்களுக்கு ஏப்ரல் 15 முதல் வீட்டிலிருந்து பணிபுரியும் (BDR) கொள் கையை அரசாங்கம் செயல்படுத்தும். மேற்கு ஆசியாவில் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து, எரிபொருள் பயன்பாட்டைக் குறைக்கவும், எரிசக்தி விநியோகத்தின் நிலைத்தன்மையை உறுதி செய்யவும் எடுக்கப்பட்ட ஒரு முயற்சியாக, இந்த நடவடிக்கை அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புக்கொள்ளப்பட்டதாக பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.

“அமைச்சுகள், முகமைகள், சட்டப்பூர்வ அமைப்புகள் மற்றும் அரசு சார்ந்த நிறுவனங்களுக்கு ஏப்ரல் 15, 2026 முதல் வீட்டிலிருந்து பணிபுரியும் கொள் கையைச் செயல்படுத்த அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புக்கொள்ளப்பட்டது. எரிபொருள் பயன்பாட்டைக் குறைப்பதும், எரிசக்தி விநியோகத்தின் நிலைத்தன்மையை உறுதி செய்வதும் இதன் நோக்கமாகும். மேலதிக விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்,” என்று அவர் கூறினார்.புத்ராஜயாவில் நடைபெற்ற ஒரு சிறப்பு செய்தியாளர் சந்திப்பில் பேசியபோது அவர் இவ்வாறு கூறினார்.

இதற்கிடையில், வர்த்தகர்கள், மீனவர்கள் மற்றும் தொழிலாளர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் எதிர்கொள்ளும் தற்போதைய சவால்களை எதிர் கொள்ளும் முயற்சியாக, அவர்களி டமிருந்து வரும் ஆலோசனைகளையும் அரசாங்கம் வரவேற்பதாக பிரதமர் அன்வார் கூறினார்.

Scroll to Top