கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்னர் நிலவுக்கு மனிதர்கள் சென்றிருந்தனர். அதன் பின்னர், நிலவு பற்றி யோசித்தோமே தவிர, அங்கு போக வேண்டும் என்று பெரிய அளவில் முயற்சிகளை எடுக்கவில்லை. இந்நிலையில், நாசா இதற்கான பயணத்தை திட்டமிட்டிருந்தது. இந்த பயணம் நேற்று அதிகாலை வெற்றிகரமாக தொடங்கியிருக்கிறது.
ஆர்ட்டெமிஸ் II என்று பெயரிடப்பட்ட இந்த திட்டத்தில், மொத்தம் 4 பேர் நிலவை நோக்கி பயணிக்கின்றார்கள இந்த விண்கலம், அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள கென்னடி விண்வெளி மையத்திலிருந்து, உலகின் சக்திவாய்ந்த ராக்கெட்டான எஸ்எல்எஸ் மூலம் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டிருக்கிறது.



