Vimarsagan Media

Home » Malaysia » தேசிய அளவில் ஒரு லட்சத்திற்கு மேல் கர்ப்பிணித் தாய்மார்கள் பயனடைவர்

தேசிய அளவில் ஒரு லட்சத்திற்கு மேல் கர்ப்பிணித் தாய்மார்கள் பயனடைவர்

சமூகப் பாதுகாப்பு அமைப்பின் (பெர்கேசோ) கீழ் முன்மொழியப்பட்ட மகப்பேறு விடுப்பு உதவித்தொகை மூலம் நாடு முழுவதும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட கர்ப்பிணித் தாய்மார்கள் விரைவில் பயனடையக்கூடும். மனித வளத்துறை அமைச்சர் டத்தோ செரி ஆர். ரமணன், முன்மொழியப்பட்ட இந்தத் திட்டத்தை முழுமையாக ஆய்வு செய்து செம்மைப்படுத்துமாறு பெர்கேசோ மூலம் தனது அமைச்சுக்கு அறிவுறுத்தியுள்ளதாகத் தெரிவித்தார்.

பணியாற்றும் பெண்களுக்கு ஆதரவளிப்பதிலும், தேசத்தைக் கட்டமைப்பதில் அவர்களின் முக்கியப் பங்கை அங்கீகரிப்பதிலும் அரசாங்க த்தின் அர்ப்பணிப்பை இந்த முயற்சி பிரதிபலிக்கிறது என்று அவர் கூறினார். “பெண்கள் வெறும் பங்களிப்பாளர்கள் மட்டுமல்ல; அவர்களே தேசியப் பொருளாதாரத்தின் முக்கிய உந்து சக்திகள்.“பெர்கேசோ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் மகப்பேறு விடுப்பு உதவித்தொகைக்கான முன்மொழிவைச் செம்மைப்படுத்துமாறு, பெர்கேசோ மூலம் மனித வளத்துறை அமைச்சுக்கு நான் அறிவுறுத்தியுள்ளேன்.

“இந்த முயற்சி நாடு முழுவதும் மகப்பேறு விடுப்பில் உள்ள ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட தாய்மார்களுக்குப் பயன ளிக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது,” என்று அவர் ஆரா டமான்சாராவில் உள்ள ஒரு ஹோட்டலில் அமைச்சு தொழிலாளர் கள் மற்றும் முதலாளிகளுக்கு இடையே யான கலந்துரையாடல் அமர்வைத் தொடங்கி வைத்தபோது கூறினார் 1955 ஆம் ஆண்டு வேலைவாய்ப்பு. சட்டத்தின் கீழ், 2023 ஜனவரி 1 முதல், பெண் ஊழியர்கள் குறைந்தபட்சம் தொடர்ச்சியாக 98 நாட்கள் ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்புக்குத் தகுதி யுடையவர்கள் ஆவார்கள்.

Scroll to Top