2025 ஆம் ஆண்டு எஸ் பி்எம் தேர்வில் (SPM) சிறப்பான தேர்ச்சி பெற்ற பத்தாங் தெராப் பகுதியைச் சேர்ந்த அறுபது மாணவர்களுக்கு ஜப்பான் மற்றும் இந்தோனேசியாவிற்கு கல்விச் சுற்றுலாக்கள் பரிசாக வழங்கப்படும். இந்தச் சுற்றுலாக்களை கெடா அனாக் மூடா மடானி அரசு சாரா அமைப்பு (NGO) வழங்குகிறது. இந்த மாணவர்கள், அந்த அமைப்பால் தத்தெடுக்கப்பட்ட இரண்டு பள்ளிகளிலி ருந்தும், மாவட்டத்தின் மற்ற ஏழு பள்ளிகளிலிருந்தும் வந்தவர்கள் என்று அதன் தலைவர் டத்தோ ஜுரைடி ரஹீம் கூறினார்.
“தத்தெடுக்கப்பட்ட பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்களில், 20 பேரை ஜப்பானுக்கு கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்வேன், அதே நேரத்தில் மற்ற பள்ளிகளைச் சேர்ந்த 40 சிறந்த மாணவர்கள் இந்தோனேசியாவின் ஜகார்த்தாவிற்கு அழைத்துச் செல்லப்படுவார்கள்,” என்று அவர் கூறினார். “முதலில், தத்தெடுக்கப்பட்ட பள்ளிகளைச் சேர்ந்தவர்களை லண்டனுக்கு அழைத்துச் செல்ல நான் திட்டமிட்டிருந்தேன், ஆனால் மத்திய கிழக்கில் நிலவும் மோதல்கள் காரணமாக, கெடா மாநிலக் கல்வித் துறை மற்றும் மாவட்டக் கல்வி அலுவலகத்துடன் கலந்தாலோசித்து, பயண இலக்கை ஜப்பானுக்கு மாற்றியுள்ளேன்,” என்று அவர் இன்று இங்கு செய்தியாளர்களிடம் தெரிவித்தார். மாணவர்கள் உயர்கல்வி நிறுவனங் களில் தங்கள் படிப்பைத் தொடர்வதற்கு முன்பு, அடுத்த மாதம் (மே) இந்தப் பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளதாக ஜுரைடி கூறினார்



