Vimarsagan Media

Home » India » எனக்குள் நீ வாழ்கிறாய் ஏன் சென்றாய்? தற்கொலை .நடிகை கணவர் உருக்கம்

எனக்குள் நீ வாழ்கிறாய் ஏன் சென்றாய்? தற்கொலை .நடிகை கணவர் உருக்கம்

பிரபல டி.வி. நடிகை சுபாஷினி (வயது 36) சென்னை அய்யப்பன்தாங்கலில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி படப்பிடிப்புகளில் பங்கேற்று வந்தார். இந்த நிலையில் அவர் பெங்களூருவில் உள்ள தனது கணவர் பிபின் சந்திராவுக்கு(38) வீடியோ கால் செய்து பேசிய பிறகு தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

இது தொடர்பாக போரூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் சுபாஷினியின் கணவர் பிபின் சந்திரா சமூக வலைதளத்தில் மனைவி மறைவு குறித்து உருக்கமாக பதிவிட்டுள்ளார். அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது:-

உன் ஆத்மா சாந்தி அடையட்டும் போபா. உன்னை போன்று என்னை யாரும் காதலித்தது இல்லை. நான் உன்னை போன்று வேறு யாரையும் காதலித்தது இல்லை. இன்று நீ உயிருடன் இல்லை என்பதையே என்னால் நம்ப முடியவில்லை.

என் நினைவுகளில், எனக்குள் நீ வாழ்கிறாய். நீ இங்கு இருப்பது போன்றே உணர்கிறேன். என்னை விட்டு ஏன் சென்றாய்?. உன் பிறந்தநாள், நம் திருமண நாள் கொண்டாட விரும்புகிறேன். நீ இல்லாமல் நான் இல்லை. அடிக்கடி பயணம் செய்ய வேண்டும் என்று கனவு கண்டோமே பேபி என்று பதிவிட்டுள்ளார.

சுபாஷினியின் வாழ்க்கையில் ஏப்ரல் மாதம் மிக முக்கியமானது ஆகும். இந்த மாதத்தில் வருகிற 12-ந்தேதி சுபாஷினியின் பிறந்த நாள். மேலும் வருகிற 21-ந்தேதி அவரின் 2-வது ஆண்டு திருமண நாளாகும்.

Scroll to Top