Vimarsagan Media

Home » Malaysia » செராஸ் பொழுதுபோக்கு மையத்தில் நடந்த நாசவேலை :-12 பேர் கைது

செராஸ் பொழுதுபோக்கு மையத்தில் நடந்த நாசவேலை :-12 பேர் கைது

இங்குள்ள செராஸ் பகுதியில் ஒரு பொழுதுபோக்கு மையத்தில் நடந்த நாசவேலை மற்றும் கலவரத்தில் ஈடுபட்டதாக நம்பப்படும் 12 பேரை காவல்துறை கைது செய்துள்ளது.

விசாரணைக்கு உதவுவதற்காக, தனது தரப்பு அவர்களைக் காவலில் வைக்க விண்ணப்பித்துள்ளதாக கோலாலம்பூர் காவல்துறைத் தலைவர் டத்தோ ஃபாடில் மார்சஸ் தெரிவித்தார்.

அவர் கூற்றுப்படி, இந்த வழக்கில் தொடர்புடைய பல வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

“இந்த வழக்கு இன்னும் விசாரணையில் உள்ளது. இது தண்டனைச் சட்டத்தின் பிரிவு 427 மற்றும் அதே சட்டத்தின் பிரிவு 148 ஆகியவற்றின் கீழ் விசாரிக்கப் படுகிறது,” என்று அவர் இன்று ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.

இச்சம்பவம் பிற்பகல் சுமார் 1.30 மணியளவில் செராஸிலுள்ள பொழுது போக்கு மையத்தில் , சம்பந்தப்பட்ட நபர்கள் ஒரு லாரியைப் பயன்படுத்தி அந்த வளாகத்தின் நுழைவாயிலில் மோதியபோது இந்தச் சம்பவம் நடந்ததாக நம்பப்படுகிறது.

சந்தேக நபர்கள் வளாகத்திற்குள் இருந்த பொருட்களை உடைத்து நாசவேலை யிலும் ஈடுபட்டனர்.

Scroll to Top