Vimarsagan Media

Home » Malaysia » ஜொகூர் இளைஞர்களுக்கான கல்வி உதவித்தொகை 2026 திட்டம் அறிவிப்பு

ஜொகூர் இளைஞர்களுக்கான கல்வி உதவித்தொகை 2026 திட்டம் அறிவிப்பு

ஜொகூர் இளைஞர்களுக்கான கல்வி உதவித்தொகை 2026 திட்டத்திற்கான விண்ணப்பங்களை அறிவித்துள்ளது. ஜொகூர் கல்வி அறக்கட்டளை (Yayasan Pelajaran Johor) 2025/2026 ஆம் ஆண்டுக்கான மலேசிய கல்விச் சான்றிதழ் (எஸ்.பி.எம்) தேர்வில் சிறந்த முடிவுகளைப் பெற்ற ஜொகூர் மாநில மாணவர்கள், உலகின் முன்னணி 20 பல்கலைக்கழகங்களில் இளங்கலைப் பட்டப்படிப்பைத் தொடர விரும்புவோரு க்காக இந்த கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.

இந்த உதவித்தொகை முழுமையான நிதி ஆதரவை வழங்குகிறது. வெளிநாட்டில் கல்வியைத் தொடரும் முன், நாட்டினுள் உயர்நிலைத் தயாரிப்பு (A-Level) படிப்பை பயிலும் வாய்ப்பும் இதில் அடங்கி உள்ளது. மேலும், ஜொகூர் மாநிலத்தின் முன்னுரிமைத் துறைகளில் உயர்கல்வி மேற்கொள்ளும் மாணவர் களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

ஜொகூர் மாநில இளைஞர்கள் இந்த சிறந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள்

Scroll to Top