Vimarsagan Media

Home » World » போரால் சேதங்கள்:- ஈரான் இழப்பீடு தர வேண்டும்:- கத்தார் முறையீடு

போரால் சேதங்கள்:- ஈரான் இழப்பீடு தர வேண்டும்:- கத்தார் முறையீடு

ஈரான் தங்கள்மீது தொடர்ந்து டிரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தி வருவதாகவும், பதற்றம் அதிகரிப்பதைத் தடுக்க அவசர நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ஐக்கிய நாடுகள் சபை மற்றும் ஐ.நா. பாதுகாப்பு சபைக்கு கத்தார் அரசு கடிதம் எழுதியுள்ளது.

ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் மற்றும் ஏப்ரல் மாதத்திற்கான சபைத் தலைவர் ஜமால் ஃபாரெஸ் அல்ரோவாயி ஆகியோருக்கு அனுப்பப்பட்ட இரண்டு வெவ்வேறான கடிதங்களில், ஏப்ரல் 2 முதல் ஏப்ரல் 6 வரை நடந்த தாக்குதல்கள் தங்கள் நிலப்பரப்பைக் குறிவைத்து நடத்தப்பட்டதாகவும், தங்கள் இறையாண்மை மற்றும் பிராந்திய ஸ்திரத்தன்மையை ஈரான் மீறியதாகவும் கத்தார் கூறியுள்ளது.

வெவ்வேறு நாட்களில் ஏவப்பட்ட ஈரானின் பல ட்ரோன்கள் மற்றும் குரூஸ் ஏவுகணைகளைத் தங்கள் ஆயுதப் படைகள் இடைமறித்ததாகவும், அதில் நடந்த ஒரு ஏவுகணை இடைமறிப் பின்போது குடியிருப்புப் பகுதியில் பாகங்கள் விழுந்து சிதறியதில் நான்கு பேர் காயமடைந்ததோடு, இதனால் சொத்துக்களும் சேதமடைந்ததாகவும் கத்தார் பாதுகாப்பு அமைச்செ தெரிவித்துள்ளது.

Scroll to Top