Vimarsagan Media

Home » Malaysia » துன் டாக்டர் லிங் லியோங் மறைவு :- குடும்பத்தினர்க்கு சில உதவிகளை அமைச்சரவை பரிசீலனை

துன் டாக்டர் லிங் லியோங் மறைவு :- குடும்பத்தினர்க்கு சில உதவிகளை அமைச்சரவை பரிசீலனை

மறைந்த துன் டாக்டர் லிங் லியோங் சிக்கின் குடும்பத்திற்கு உதவி வழங்க அமைச்சரவை ஒருமனதாக ஒப்புக்கொண்டுள்ளது என டத்தோ ஃபஹ்மி ஃபட்சில் தெரிவித்தார்.

வாராந்திர அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பிறகு பேசிய தகவல் தொடர்புத் துறை அமைச்சர், சமீபத்தில் காலமான முன்னாள் போக்குவரத்து அமைச்சரும், முன்னாள் எம்சிஏ தலைவருமான அவரது பாரம்பரியத்தை அரசாங்கம் கௌரவிக்க விரும்புவதாகக் கூறினார்.

துயரத்தில் வாடும் அவரது குடும்பத்தினருக்கு அமைச்சரவை தனது ஆழ்ந்த இரங்கலை முறைப்படி பதிவு செய்துள்ளதாகவும் அவர் கூறினார். “அவரது மறைவுக்கு மரியாதை செலுத்தும் விதமாக குடும்பத்தினருக்கு வழங்கப்பட வேண்டிய சில உதவிகளையும் அமைச்சரவை பரிசீலித்துள்ளது,” என்று அவர் இங்கு நடந்த செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

Scroll to Top