சண்டை நிறுத்தம் எட்டப்பட்டபோதிலும் ஈரானை விட்டு உடனடியாக வெளி யேறும் படி இந்தியக் குடிமக்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
ஈரானியத் தலைநகர் தெஹ்ரானில் உள்ள இந்தியத் தூதரகம் அந்த அறிவிப்பை வெளியிட்டது.
இந்தியக் குடிமக்கள் தூதரகத்துடன் தொடர்ந்து தொடர்பில் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது.
ஈரானைவிட்டு வெளியேறுவதற்குப் பரிந்துரைக்கப்பட்ட பாதைகளைப் பயன்படுத்தும்படியும்வலியுறுத்தப்பட்டது. ஆலோசனையின்றி எந்தவொரு நில எல்லைப் பகுதியையும் அணுகக்கூடாது எனத் தெரிவிக்கப்பட்டது.
ஏப்ரல் 7 அன்று வெளியிடப்பட்ட தூதரக அறிக்கையின்படி குறைந்தபட்சம் 48 மணி நேரத்திற்கு உட்புறங்களில் இருக்கவேண்டும். மின் உற்பத்தித் தளங்கள், ராணுவத்தளங்கள், கட்டடங்களின் உயர் மாடிகள் போன்ற இடங்களைத் தவிர்க்கும்படி தூதரகம் எச்சரித்தது.




