வர்த்தக கப்பல் போக்குவரத்துக்கு ஏதுவாக ஈரான் தனது ஹார்முஸ் ஜலசந்தியை திறக்க இசைந்துள்ளதால் அமெரிக்கா, இஸ்ரேல் உடன் 2 வாரம் போர் நிறுத்தம் நேற்று ஏற்பட்டது. நாளை (10) பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் வைத்து இரு அமெரிக்கா – ஈரான் பிரதிநிதிகள் பேச்சுவார்த்தை நடத்த ஆயத்தமாகி வருகின்றனர்.
இந்த சூழலில் அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது பதிவில், “ஒரு நிரந்தரமான மற்றும் உண்மையான ஒப்பந்தம் எட்டப்படும் வரை அமெரிக்க ராணுவம் ஈரானின் எல்லைகளிலிருந்து பின் வாங்காது. துல்லியமாக தாக்குதல் நடத்த தேவையான ஆயுதங்கள், தளவாடங்களுடன் அமெரிக்கப் போர்க்கப்பல்கள், விமானங்கள் மற்றும் வீரர்கள் நிலைநிறுத்தப்பட்டிருப்பார்கள்.
போர் நிறுத்தத்தின் போது, ஹார்முஸ் ஜலசந்தியை முழுமையாகத் திறந்து வைப்பதாகவும், அணு ஆயுதங்களை உருவாக்கப் போவதில்லை என்றும் ஈரான் உறுதியளித்துள்ளது. ஈரான் தனது வாக்குறுதிகளை மீறினால், உலகம் இதுவரை பார்த்திராத வகையில் மிகக் கடுமையான தாக்குதல் நடத்தப்படும்; துப்பாக்கிகள் தான் பேசும்.
இதற்கிடையில், நமது மாபெரும் ராணுவம் ஆயுதங்களில் தோட்டாக்களை மீண்டும் நிரப்பிக்கொண்டும் ஓய்வெடுத்துக்கொண்டும் இருக்கிறது; சொல்லப்போனால், அது தனது அடுத்த வெற்றியை ஆவலுடன் எதிர்நோக்கிக் காத்திருக்கிறது. அமெரிக்கா மீண்டும் களத்திற்கு வந்துவிட்டது.” என்று குறிப்பிட்டுளார்.




