இங்குள்ள கோத்தா ஜெயாவில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் மூன்று பேர் கொல்லப்பட்டனர். ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 19) நண்பகல் வாக்கில் நடந்ததாக நம்பப்படும் இந்தச் சம்பவத்தில், இரண்டு ஆண்களும் ஒரு பெண்ணும் ஈடுபட்டதாகத் தெரிகிறது. இந்த வழக்கு தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், ஒரு கைத்துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டு உள்ளதாகவும் ஒரு தகவல் தெரிவித்தது.
இதுகுறித்துத் தொடர்பு கொண்டபோது, ஜொகூர் காவல்துறைத் தலைவர் கம் டத்தோ அப்துல் ரஹ்மான் அர்சாத், இந்தச் சம்பவத்தில் மூன்று பேர் கொல்லப் பட்டதை உறுதி செய்தார். மேலும், ஒருவர் கைது செய்யப் பட்டுள்ளதையும் அவர் உறுதிசெய்து, விரைவில் அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியிடப்படும் என்றும் குறிப்பிட்டார். இந்தச் சம்பவத்தின் புகைப்படங்களும் காணொளிகளும் முன்னதாக சமூக ஊடகங்களில் பரவியிருந்தன.




