Vimarsagan Media

Home » India » நடிகை ரோஜா மகள் அன்ஷுக்கு அமெரிக்காவில் உயரிய விருது

நடிகை ரோஜா மகள் அன்ஷுக்கு அமெரிக்காவில் உயரிய விருது

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாகவும், ஆந்திராவின் முன்னாள் அமைச்சரமான ரோஜா தனது மகளுக்கு அமெரிக்காவில் உயரிய விருது கிடைத்துள்ளதாக சமூகவலைதள பக்கத்தில் குறிப்பி்ட்டுள்ளார். இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

சினிமாவில் பல வெற்றிப்படங்களை கொடுத்த ரோஜா, அரசியலில், ஆந்திராவின் ஒய்.எஸ்.ஆர்,காங்கிரஸ் கட்சியில் அமைச்சராக பணியாற்றி யுள்ளார்.

தற்போது அமெரிக்காவில் இருக்கும் ரோஜா செல்வமணி தம்பதியின் மகள் அன்ஷு ரோஜா செல்வமணிக்கு, அமெரிக்காவின் ப்ளூமிங்டனில் உள்ள இந்தியானா பல்கலைக்கழகம் ‘ஹெர்மன் பி வெல்ஸ்’ (Herman B Wells) விருதை வழங்கி கௌரவித்துள்ளது.

இந்த விருது வழங்கும் விழாவில் முன்னாள் அமைச்சர் ரோஜா, தனது கணவரும் இயக்குநருமான ஆர்.கே. செல்வமணியுடன் கலந்துகொண்டார் அன்ஷு ரோஜா செல்வமணி, அங்குள்ள ‘லுடி ஸ்கூல் ஆஃப் இன்பர்மேட்டிக்ஸ், கம்ப்யூட்டிங் அண்ட் இன்ஜினியரிங்’ (Luddy School of Informatics, Computing and Engineering) கல்லூரியில் கணினி அறிவியல் (Computer Science) பயின்று வருகிறார். அவர் 2025-ஆம் ஆண்டிற்கான தொழில்நுட்ப மேன்மை மற்றும் சமத்துவத்திற்கான ‘மோரின் பிங்கர்ஸ் தலைமைத்துவ விருது’ (Maureen Biggers Leadership Award) மற்றும் 2024-25-ஆம் ஆண்டிற்கான ‘லுடி கல்வி சார் மேன்மை விருது’ (Luddy Academic Excellence Award) ஆகியவற்றை வென்றுள்ளார்.

அன்ஷு செல்வமணி ‘சென் வூ இன்னோவேஷன் சேலஞ்ச்’ (Chen Wu Innovation Challenge) போட்டியில் இறுதிப் போட்டியாளராகத் தேர்வானார். மேலும், அவர் கிரேஸ் ஹாப்பர் ஸ்காலர்ஷிப் (Grace Hopper Scholarship), உலகளாவிய தொழில்முனைவோர் விருது-2024 (Global Entrepreneur Award-2024), உலகளாவிய தாக்கத்திற்கான வழக்கறிஞர் விருது 2025 (Global Impact Advocate Award 2025) உள்ளிட்ட பல விருதுகளை வென்றுள்ளார்.

Scroll to Top