லேசிய அதிகாரிகள் தங்களது சோதனைச் சாவடிக்கு அருகே ‘நடந்து செல்ல அனுமதி இல்லை’ என்ற புதிய அறிவிப்புப் பலகையை வைத்ததை அடுத்து, ஜோகூர் பாலத்தை நடந்தே கடப்பது சட்டபூர்வமானதா என்பது குறித்த விவாதங்கள் அண்மையில் இணையத்தில் சூடுபிடித்துள்ளன.
உட்லண்ட்ஸ்-ஜோகூர் பாலத்தில் முழு நீளத்திலும் நடக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது என்பதை பாதசாரிகளுக்கு நினைவூட்டும் முயற்சிகளை முடுக்கி விட்டு ள்ளதாக மலேசிய அதிகாரிகள் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழிடம் தெரிவித்தனர்.
இருப்பினும், சிங்கப்பூர் பகுதியில் உள்ள பாலத்தில் நடந்து செல்லத் தடை செய்யும் குறிப்பிட்ட விதிகள் எதுவும் இல்லை என சிங்கப்பூர் அதிகாரிகள் உறுதியாகக் கூறுகின்றனர்.
மலேசிய அதிகாரிகள் தங்களது சோதனைச் சாவடிக்கு அருகே ‘நடந்து செல்ல அனுமதி இல்லை’ என்ற புதிய அறிவிப்புப் பலகை வைத்ததை அடுத்து, ஜோகூர் பாலத்தை நடந்தே கடப்பது சட்டபூர்வமானதா என்பது குறித்த விவாதங்கள் அண்மையில் இணையத் தில் சூடுபிடித்துள்ளன.
நெரிசல் மிகுந்த நேரங்களில் போக்கு வரத்து நெரிசலை சமாளிக்க, வேறு வழியில்லாத நிலை ஏற்படும்போது அன்றாடம் சிலர் ஜோகூர் பாலத்தை நடந்தே கடக்கின்றனர்.
இந்நிலையில், இந்த அறிவிப்புப் பலகை இப்போது வைக்கப்பட்டதற்கான நேரம் குறித்து இணையவாசிகள் சிலர் கேள்வி எழுப்பினர். அண்மைய மாதங்களில் ஜோகூர் பாலத்தில் பாதசாரிகள் தொடர்பான விபத்துகளுக்குப் பிறகே இந்த அறிவிப்புப் பலகை வைக்கப்பட்டிருக் கலாம் என்று நம்பப்படுகிறது.




