சென்னை:தமிழகத்தில்5.73 கோடி வாக்காளர்களும் வாக்களிப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் வெற்றிகரமாக செய்யப்பட்டிருப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளுக்கும் இன்று (ஏப்ரல் 23) ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு மாநிலம் முழுவதும் தேர்தல் ஆணையம் விரிவான முன்னேற்பாடுகளை மேற்கொண்டுள்ளது. வாக்காளர்கள் சுதந்திரமாகவும், நேர்மையாகவும் தங்கள் வாக்குரிமையைப் பதிவு செய்ய தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக தமிழக தேர்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
14 லட்சம் முதல் முறை வாக்காளர்கள்
மொத்தம் 5 கோடியே 73 லட்சத்து 43 ஆயிரத்து 291 வாக்காளர்கள் நாளை தங்களின் ஜனநாயக கடமையை ஆற்ற உள்ளனர். இவர்களில், 2 கோடியே 80 லட்சத்து 30 ஆயிரத்து 658 ஆண் வாக்காளர்களும், 2 கோடியே 93 லட்சத்து 4 ஆயிரத்து 905 பெண் வாக்காளர்களும் உள்ளனர். இவர்களை தவிர, 7 ஆயிரத்து 728 மூன்றாம் பாலினத்து வாக்காளர்களும் இந்த தேர்தலில் வாக்களிக்க உள்ளனர். இவர்களில் 14 லட்சத்து 59 ஆயிரத்து 93 பேர் முதல் முறை வாக்காளர்கள் ஆவர். 75,000 வாக்குச்சாவடிகள்
மாநிலம் முழுவதும் 75 ஆயிரத்து 64 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. நகர்ப்புறம் மற்றும் கிராமப்புறம் என அனைத்து பகுதிகளிலும் வாக்காளர்கள் எளிதில் அணுகும் வகையில் வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், வாக்களிப்பதற்காக 1 லட்சத்து 6 ஆயிரத்து 404 இவிஎம் இயந்திரங்களும், 75 ஆயிரத்து 64 கட்டுப்பாட்டு கருவிகளும், 75 ஆயிரத்து 64 விவிபேட் இயந்திரங்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
தேர்தல் வழிகாட்டி தளம்
இத்துடன், 3 லட்சம் அரசு ஊழியர்கள், 83 ஆயிரம் காவலர்கள், 300 துணை ராணுவ படையினர் தேர்தல் பணியில் ஈடுபட்டு உள்ளனர். மாநிலம் முழுவதும் 5,949 வாக்குச்சாவடிகள் பதற்றமானவையாக கண்டறியப்பட்டுள்ளன. இந்த வாக்குச்சாவடிகளில் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். வாக்காளர் கூடுதல் தகல்களை அறிந்து கொள்ள ஏதுவாக ‘தேர்தல் வழிகாட்டி’ (https://votervazhikatti.tn.gov.in/) இணையதளம் தயார் செய்யப்பட்டு ள்ளது.
No comments yet
Be the first to comment.




