கோலாலம்பூரில் உள்ள மொத்தம் 163 முஸ்லிம் அல்லாத வழிபாட்டுத் தலங்கள் அரசு நிலத்தில் கட்டப்பட்டவை என அடையாளம் காணப்பட்டுள்ளதாக கூட்டரசு பிரதேச அமைச்சர் ஹன்னா யோ தெரிவித்துள்ளார்.
சமூகத்தின் தேவைகளையும் தற்போதுள்ள சட்டக் கட்டமைப்பையும் கருத்தில் கொண்டு, அங்கீகரிக்கப்படாத முஸ்லிம் அல்லாத வழிபாட்டுத் தலங்கள் பிரச்சினையில் அரசாங்கம் ஒரு கட்டமைக்கப்பட்ட, விவேகமான மற்றும் நியாயமான அணுகுமுறையைக் கையாண்டு வருவதாக யோ கூறினார்.
“கூட்டரசுப் பிரதேசங்கள் துறை, நாடாளுமன்றத் தொகுதிகளின்படி அங்கீகரிக்கப்படாத முஸ்லிம் அல்லாத வழிபாட்டுத் தலங்களின் வரைபடத்தை உருவாக்கி வருகிறது,” என்று அவர் இன்று கூட்டரசு பிரதேசங்களின் முஸ்லிம் அல்லாத வழிபாட்டுத் தலங்கள் குழுவின் கூட்டத்திற்குத் தலைமை தாங்கிய பின்னர் தனது முகநூல் பதிவில் தெரிவித்தார்.




