கோலாலம்பூர்–சிரம்பான் கம்யூட்டர் வழித்தடம் நாட்டின் மிகவும் பரபரப்பான ரயில் பாதைகளில் ஒன்றாகும். இது தினமும் காலை 6 மணி முதல் நள்ளிரவு வரை சுமார் 18 சேவைகளை இயக்கு கிறது.
பயணிகள் கூட்டம் குறைவாக இருக்கும் நேரங்களில் ரயில்கள் ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை இயக்கப் படுகின்றன, அதேசமயம் பயணிகள் கூட்டம் அதிகமாக இருக்கும் நேரங்களில் 20 முதல் 30 நிமிடங்களுக்கு ஒருமுறை சேவைகள் வருகின்றன.
வார நாட்களில் இந்த வழித்தடம் குறிப்பாக நெரிசலாக இருக்கும். மாலை 5 மணிக்கு முன்பே, கோலாலம்பூர் சென்ட்ரல் ரயில் நிலைய நடைமேடைகள், செரம்பான் செல்லும் ரயிலுக்காகக் காத்திருக்கும் பயணிகளால் நிரம்பி வழிகின்றன. பயணிகளுக்காக ஒதுக்கப்பட்ட இடங்களில் நீண்ட வரிசைகள் உருவாகின்றன, ஆனால் ரயில் வந்தவுடன், பயணிகள் இருக்கைகளைப் பிடிக்க முண்டியடித்து க்கொண்டு உள்ளே நுழைகின்றனர்.
கடந்த செவ்வாய்க்கிழமை மாலை, இந்தக் குழப்பத்தை நான் நேரில் அனுபவித்தேன் என்கிறார் சன் ஊடகத்தில் பயணி ஒருவர் எழுதியிருந்தார். நடைபாதை யில் இருந்த கட்டுக்கடங்காத கூட்டத்தால் நான் பெட்டிக்குள் இழுத்துச் செல்லப் பட்டேன். சில கணங்களிலேயே, பயணிகள் நெரிசலில் சிக்கினர்.
மிட் வேலி நிறுத்தத்தில், ஏற்கனவே நெரிசலாக இருந்த பெட்டிக்குள் இன்னும் அதிகமான பயணிகள் முட்டி மோதிக் கொண்டனர். இடமே இல்லாமல் தவித்தனர். செர்டாங், காஜாங் மற்றும் பண்டார் தாசேக் தெல்தான் போன்ற அடுத்தடுத்த நிறுத்தங்களிலும், இன்னும் அதிகமான பயணிகள் ரயிலில் ஏறக் காத்திருந்தனர்.
ஏறுவது தாமதமானது. இந்தத் தினசரி சிரமத்திற்குத் தீர்வு காண, கே.டி.எம்.பி (KTMB) கடுமையான கூட்ட மேலாண்மை யையும், ஒழுங்கான வரிசை முறை யையும் அறிமுகப்படுத்த வேண்டும். உச்ச நேரங்களில் முக்கிய நிறுத்தங் களில் அதிகாரிகள் பணியமர்த்தப்பட வேண்டும், மேலும் ஒவ்வொரு பெட்டி யிலும் ஏறும் பயணிகளின் எண்ணிக்கை யும் கட்டுப்படுத்தப்பட வேண்டும்.
பணியில் இருக்கும் பல மலேசியர் களுக்கு, இந்த வழித்தடத்தில் வீட்டிற்குப் பயணம் செய்வது மன அழுத்தத்தை ஏற்படுத்தும் ஒன்றாக மாறியுள்ளது.




