வேர்ல்டுவைடு ஹோல்டிங்ஸ் பிஎச்டி (WHB) நிறுவனத்தால் நிர்வகிக்கப்படும் மின்னேற்றி நிலையங்களின் மேம்பாடு உட்பட, மாநிலத்தின் தூய்மையான எரிசக்தி சூழலமைப்பின் தயார்நிலை யைப் பொறுத்தே இதன் செயலாக்கம் அமையும் என்று மாநில முதலீடு, வர்த்தகம் மற்றும் போக்குவரத்து குழுவின் தலைவர் என்ங் ஸீ ஹான் கூறினார்.
ஹைட்ரஜன் உற்பத்தியின் அதிக செலவு, அத்துடன் எலக்ட்ரோலைசர்கள் மற்றும் எரிபொருள் நிரப்பும் அமைப்புகள் போன்ற வசதிகளின் தேவை ஆகியவற்றின் காரணமாக இந்த முயற்சிக்கு கவனமான திட்டமிடல் தேவை என்று அவர் கூறினார்.
இன்று இங்கு நடைபெற்ற சிலாங்கூர் மாநில சட்டமன்றக் கூட்டத்தொடரின் போது, பாங் சாக் தாவோ (பிஎச்-கோலா குபு பாரு) எழுப்பிய துணைக் கேள்விக்கு அவர் பதிலளித்தார்.
சிலாங்கூரில் தற்போது 1,090 மின்சார வாகன (EV) சார்ஜிங் நிலையங்கள் உள்ளன என்றும், அவற்றில் ஷா ஆலம் (226) பகுதியில் அதிகபட்சமாகவும், அதைத் தொடர்ந்து காஜாங் (221), செபாங் (182) மற்றும் சுபாங் ஜெயா (145) ஆகிய பகுதிகளில் அடுத்தடுத்த இடங்களிலும் உள்ளன என்றும் அவர் கூறினார்
மற்ற பகுதிகளில் பெட்டாலிங் ஜெயா (68), செலாயாங் (53), அம்பாங் ஜெயா (49), கோலா லங்காட் (47), கோலா சிலாங்கூர் (43), கிளாங் (43), ஹுலு சிலாங்கூர் (12) மற்றும் சபாங் பெர்னாம் (ஒன்று) ஆகியவை அடங்கும்.
“மின்சார வாகனப் பயன்பாட்டை ஊக்குவிக்கும் வகையில், மாநில அரசு, உள்ளாட்சி அமைப்புகள் மூலம், திட்ட ஒப்புதலின் கீழ் உள்ள புதிய கட்டுமானங்களுக்கு மின்சார வாகன சார்ஜிங் உள்கட்டமைப்பை நிறுவுவதை ஒரு கட்டாயத் தேவையாக ஆக்கியுள்ளது,” என்று அவர் கூறினார்.




