தாய்லாந்தில் இருந்து திரும்பிய 22 பௌத்த துறவிகள் கொழும்பு பண்டாரநாயக்க அனைழ்துலக விமான நிலையத்தில், சுமார் ரூ.110 கோடி மதிப்பிலான போதைப்பொருட்களுடன் ஏப்ரல் 26, 2026 அன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.
பறிமுதல்: சுமார் 110 கிலோகிராம் கஞ்சா பள்ளிப் பொருட்கள் மற்றும் இனிப்புகளுக்குள் மறைத்து வைத்து கடத்தப்பட்டது என தெரிய வருகிறது இவர்கள் தாய்லாந்தின் பேங்காக் நகரிலிருந்து ஏப்ரல் 25 இரவு விமானத்தில் வந்து சேர்ந்தனர்.
விமான நிலைய சுங்கப்பிரிவு மற்றும் போதைப்பொருள் தடுப்புப் பணியக அதிகாரிகள், உளவுத்துறை தகவலின் பேரில் இந்த அதிரடி சோதனையை நடத்தினர்.
இவர்கள் பெரும்பாலானோர் இளைஞர்கள் மற்றும் பல பகுதிகளில் உள்ள கோவில்களில் தங்கி கல்வி பயில்பவர்கள் என கூறப்படுகிறது.
நடவடிக்கை: கைது செய்யப்பட்ட துறவிகள் மீது போதைப்பொருள் கடத்தல் மற்றும் சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டுகள் பதியப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.
இது கொழும்பு விமான நிலைய வரலாற்றில் மிகப்பெரிய போதைப்பொருள் கடத்தல் முயற்சி என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.




