இந்த ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் மாநிலம் முழுவதும் உள்ள 38 விற்பனை நிலையங்களில் நடத்தப்பட்ட சோதனைகளைத் தொடர்ந்து, நெகிரி செம்பிலான் ராயல் மலேசிய சுங்கத்துறை (JKDM), வரி உட்பட 2.13 மில்லியன் ரிங்கிட்டுக்கும் அதிகமான மதிப்புள்ள சட்டவிரோத சிகரெட்டுகள் மற்றும் மதுபானங்களைப் பறிமுதல் செய்துள்ளது.
இந்த அமலாக்க நடவடிக்கையைத் தொடர்ந்து, 35 முதல் 56 வயதுக்குட்பட்ட 26 உள்ளூர்வாசிகள் விசாரிக்கப்பட்டு வருவதாகவும், இரண்டு வெளிநாட்டினர் மீது நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ளதாகவும் அதன் இயக்குநர் முஹம்மது இல்யாஸ் குயீக் அப்துல்லா தெரிவித்தார்.
சுங்க (இறக்குமதி மீதான தடை) ஆணை 2023-இன் கீழ் தடைசெய்யப்பட்ட இறக்குமதிப் பொருட்கள் என சந்தேகிக்கப்படும் சிகரெட்டுகள் மற்றும் மதுபானங்களை, ஆய்வு செய்யப்பட்ட 38 விற்பனை நிலையங்களும் விற்பனை செய்து வந்தது கண்டறியப்பட்டது.
“பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களில், 1.75 மில்லியன் சிகரெட்டுகளுக்கு இணையான 96,879 பாக்கெட்டுகளும், 26,375 கேன்கள் அல்லது பாட்டில்களில் (12,331.34 லிட்டர்) மதுபானமும் அடங்கும். வரி உட்பட இவற்றின் மதிப்பு RM2.13 மில்லியனுக்கும் அதிகமாகும்,” என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
விற்பனை நிலைய உரிமையாளர்கள் அல்லது ஊழியர்கள், சட்டவிரோத சிகரெட்டுகள் மற்றும் மதுபானங்களை சந்தை விலையை விட மிகக் குறைந்த விலையில் வழக்கமான வாடிக்கையாளர்களுக்கு ரகசியமாக விற்பனை செய்வதே இந்தச் செயல்பாட்டின் முக்கிய அம்சம் என்று முகமது இல்யாஸ் குயீக் கூறினார்




