ரிஷிகா சுந்தரம் (19 வயது)பலரும் சாத்தியமற்றது என்று கருதும் ஒன்றைச் சாதித்துவிட்டார்.நெகிரி செம்பிலான், நிலாய்-இல் வளர்ந்த, முன்னாள் SMK புத்ரி மாணவியான இவர், எஸ்பி எம் தேர்வில் 10A+ மதிப்பெண்களைப் பெற்றார். பின்னர், ஷெல் மலேசியா கல்வி உதவித்தொகையின் கீழ் கோலேஜ் யாயாசன் UEM-இல் தனது A-லெவல் படிப்பைத் தொடர்ந்தார்.
2026-இல், கொலம்பியா பல்கலைக் கழகம், பென்சில்வேனியா பல்கலைக் கழகம், மற்றும் கலிபோர்னியா பல்கலைக்கழகம், லாஸ் ஏஞ்சல்ஸ் உள்ளிட்ட பல முன்னணி உலகளாவிய பல்கலைக்கழகங்களிலிருந்து அவருக்கு வாய்ப்புகள் வந்தன. இறுதியில், அவர் கால்டெக்-இல் சேர ஒப்புக்கொண்டார். அதன் மூலம், கால்டெக்கின் 2030-ஆம் ஆண்டு மாணவர் குழுவில் ஏற்றுக்கொள் ளப்பட்ட ஒரே மலேசியர் என்ற பெருமை யை நான் பெற்றேன் என்கிறார் ரிஷிகா.
விண்மீன் திரள்களைக் கண்டறிவது முதல் செயற்கை நுண்ணறிவுக்கான பதில்களைத் தேடுவது வரை தரவு அறிவியல் என்றால் என்னவென்று தெரிவதற்கு நீண்ட காலத்திற்கு முன்பே, ரிஷிகா வடிவங்களால் ஈர்க்கப்பட்டி ருந்தார். சிறு வயதில், நான் பால்வழி மண்டலத் தின் சுருள்களை வரைந்து வந்தேன்,” என்று அவர் பகிர்ந்துகொண்டார்.
அந்த ஆர்வம் பிற்காலத்தில் கணிதத் தின் மீதான ஆழ்ந்த பேரார்வமாக வளர்ந்து, இறுதியில் அவரை இயந்திரக் கற்றல் ஆராய்ச்சிக்கு இட்டுச் சென்றது. தனது வழிகாட்டியுடன் இணைந்து, ரிஷிகா 270 கிரேடியன்ட் டிசென்ட் சோதனைகளை நடத்தினார், இது இத்தாலியின் நேபிள்ஸில் நடந்த ஒரு அனைத்துலக மாநாட்டில் உரையாற்றுவதற்கான வாய்ப்பை அவருக்குப் பெற்றுத் தந்தது.




