Vimarsagan Media

Home » India » எம்ஜிஆர்க்கு பின் சினிமாவிலிருந்து அரசியல் களம் கண்டவர்;- திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் பெருமிதம்

எம்ஜிஆர்க்கு பின் சினிமாவிலிருந்து அரசியல் களம் கண்டவர்;- திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் பெருமிதம்

விஜய் தனித்து போட்டியிட்ட முதல் தேர்தலிலேயே, தனிப்பெரும் வெற்றியை பெற்று, வரலாற்று சாதனையை புரிந்துள்ளார்.

தளபதி விஜய், நடிகராக மாபெரும் வெற்றிகள் பல கண்டு, வசூல் மன்னனாக தமிழ் சினிமாவில் பல வருடங்கள் கொண்டாடப்பட்டு வந்தவர் இரண்டு வருடங்களுக்கு முன்பு சினிமாவை விட்டுவிட்டு அரசியலில் அடியெடுத்து வைத்த போது, தமிழ் சினிமாவிற்கு அது பெரிய இழப்பாக அனைவராலும் பார்க்கப்பட்டது.

ஆனால், அது தமிழ் நாட்டுக்கே வரப்பிரசாதமாக மாறி, இன்று தனித்து போட்டியிட்ட முதல் தேர்தலிலேயே, தனிப்பெரும் வெற்றியை பெற்று, வரலாற்று சாதனையை புரிந்துள்ளார்.

புரட்சி தலைவர் எம்ஜிஆர்-க்கு பின் தமிழ் சினிமாவிலிருந்து அரசியல் சென்று நேரடியாக களம் கண்டு, வெற்றி அடைந்த மாபெரும் சாதனையாளராக இன்று தளபதி விஜய் உருவாகியிரு க்கிறார்.

விஜய் அவர்களின் இந்த வெற்றியை இன்று உலகமே கொண்டாடுகிறது. அந்த கொண்டாட்டத்தில் தமிழ் சினிமாவை சார்ந்த அனைவரும் கலந்து கொள்வதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறோம்.

Scroll to Top