Vimarsagan Media

Home » Uncategorized » சீனாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! இருவர் பலி; 7000 பேர் வெளியேற்றம்!

சீனாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! இருவர் பலி; 7000 பேர் வெளியேற்றம்!

சீனாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் 2 பேர் பலியானதைத் தொடர்ந்து அங்கு வசிக்கும் 7000 பேரை வெளியேற்றும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

சீனா நாட்டின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள குவாங்ஷி மாகாணத்தில் திங்கள்கிழமை (மே 18) அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு ள்ளது. வீடுகள், கட்டடங்கள் உள்ளிட்ட கட்டமைப்புகளை உலுக்கிய இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.2 ஆகப் பதிவாகியுள்ளது.

இந்த நிலநடுக்கத்தால், சுமார் 13 கட்டடங்கள் இடிந்து சேதமடைந்துள்ள நிலையில், அதிர்வுகளால் அப்பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டு அங்குள்ள ஏராளமான சாலைகள் முடங்கியுள்ளன.

Scroll to Top