தமிழினப்படுகொலையின் 17ஆம் ஆண்டு நினைவேந்தல் நாளை முன்னிட்டு “தமிழின அழிப்பு நினைவு நாள்” பேரணியும் கவனயீர்ப்பும் நேற்றையதினம் (18.05.2026) லண்டன் நகரில் நடைபெற்றுள்ளது.
தமிழ் மக்களுக்கு எதிராக இடம்பெற்ற இனப்படுகொலையை உலக நாடுகளுக்கு மீண்டும் நினைவூட்டும் நோக்கில் ஒழுங்குபடுத்தப்பட்டிருந்தது.
இந்நிகழ்வு பிரட்டன் நேரப்படி பிற்பகல் 3 மணியளவில் Parliament Square பகுதியில் ஆரம்பமாகியதுடன், Westminster Underground station அருகில் மக்கள் ஒன்று கூடியதைத் தொடர்ந்து Downing Street நோக்கி பேரணி முன்னெடுக்கப்பட்டது




