Vimarsagan Media

Home » Uncategorized » ஜூலை 1 முதல் மூன்று ஆண்டுகள் வரை வணிக உரிமங்களைப் புதுப்பிக்க அனுமதி :-அமைச்சர் ஹன்னா யோ

ஜூலை 1 முதல் மூன்று ஆண்டுகள் வரை வணிக உரிமங்களைப் புதுப்பிக்க அனுமதி :-அமைச்சர் ஹன்னா யோ

கோலாலம்பூர்மாநகராண்மைக் கழகம் (DBKL), ஜூலை 1 முதல் மூன்று ஆண்டுகள் வரை வணிக உரிமங்களைப் புதுப்பிக்க அனுமதிக்கும் என்று பிரதமர் துறையின் (கூட்டரசு பிரதேச அமைச்சர் ஹன்னா யோ கூறுகிறார்.

தலைநகரின் வணிகச் சூழலை மேலும் திறமையானதாகவும், வணிகத்திற்கு உகந்ததாகவும் மாற்றுவதற்கான ஒரு முயற்சி இது என்று யோ கூறினார்.

கூடுதல் ஊக்கத்தொகையாக, இரண்டு ஆண்டு புதுப்பிப்புகளுக்கு 5% தள்ளுபடியும், மூன்று ஆண்டு புதுப்பிப்புகளுக்கு 10% தள்ளுபடியும் DBKL வழங்கும் என்று அவர் கூறினார்.

இருப்பினும், உரிமம் பெற்றவர் DBKL-க்கு செலுத்த வேண்டிய நிலுவையில் உள்ள அபராதங்கள் அல்லது வாடகைப் பாக்கிகள் எதுவும் கொண்டிருக்கக் கூடாது என்பது உட்பட சில நிபந்தனைகளுக்கு இது உட்பட்டது.

இந்த முயற்சியால் சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினரும் பயனடைவார்கள் என்று யோ கூறினார்.

“இந்த வர்த்தகர்களில் பலருக்கு வங்கிகள் அல்லது நிதி நிறுவனங்களிடமிருந்து கடன்கள் தேவைப்படலாம்.

“உரிமம் ஒரு வருடத்திற்கு மட்டுமே என்றால், இந்த வணிகம் அடுத்த ஆண்டும் லாபகரமானதாக இருக்குமா என்பதை வங்கிகளுக்கோ அல்லது நிதி நிறுவனங்களுக்கோ மதிப்பிடுவது கடினம். “ஒவ்வொரு ஆண்டும் வணிக உரிமத்தைப் புதுப்பிப்பதில், மனிதவளம் மற்றும் செயல்பாட்டுச் செலவுகள் போன்ற மறைமுகச் செலவுகள் அடங்கியுள்ளன.

“உரிமம் பெற்றவர் ஒரு வணிகக் கணக்கைத் திறக்க விரும்பினால், சில வங்கிகளுக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட ஆண்டுகளுக்கு உரிமம் தேவைப்படு கிறது,” என்று புத்ராஜயாவின் 2-ஆம் வட்டாரத்தில் உள்ள மெனாரா ஸ்ரீ விலாயாவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது அவர் கூறினார்.

Scroll to Top