அமெரிக்கா – இஸ்ரேல் கூட்டுப் படைகள் கடந்த பிப்ரவரி மாதம் ஈரானுக்கு எதிராக ‘ஆபரேஷன் எபிக் ஃபியூரி’ தாக்குதலை தொடங்கின. இது ஈரான்-அமெரிக்கா போராக வெடித்தது. இதில் அமெரிக்கா மொத்தம் 42 விமானங்கள் மற்றும் ட்ரோன்கள் இழந்துள்ளதாக தற்போது தெரிய வந்திருக்கிறது.
சுமார் 40 நாட்கள் நீடித்த மோதல்களில் அமெரிக்க ராணுவ இழப்புகள் குறித்து, அந்நாட்டு நாடாளுமன்ற ஆராய்ச்சி சேவை அமைப்பு ஓர் அதிகாரபூர்வ அறிக்கையைச் சமர்ப்பித்தது.
அமெரிக்கப் பாதுகாப்புத் துறை மற்றும் மத்திய கட்டளை அமைப்பு (CENTCOM) வழங்கிய தகவல்படி, மொத்தம் 42 விமானங்கள் சேதப்படுத்தப்பட்டதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.




