உலக சுகாதார அமைப்பின் (WHO) 79ஆவது உலக சுகாதார மாநாடு சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் நடைபெற்று வருகிறது.
இந்த மாநாட்டில் விவாதிக்கப்படவுள்ள 75-க்கும் மேற்பட்ட முக்கிய அம்சங்களில், உலகளவில் அச்சுறுத்தலாக மாறிவரும் மனநலப் பாதிப்புகள் குறித்த விவாதம் முதன்மை பெற்றுள்ளது.
தற்போதைய நிலவரப்படி, உலகளவில் சுமார் ஒரு பில்லியனுக்கும் அதிகமான மக்கள், அதாவது தோராயமாக எட்டில் ஒருவர் ஏதேனும் ஒரு வகையான மனநலப் பாதிப்புடன் வாழ்ந்து வருவதாக உலக சுகாதார அமைப்புஎச்சரித்துள்ளது.
மேலும், இந்த எண்ணிக்கை நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
மனநலம் சார்ந்த கோளாறுகள் மனிதர்களின் உணர்வுகள், சிந்தனைகள் மற்றும் செயல்பாடுகளைப் பாதிக்கின் றன. மருத்துவ வல்லுநர்கள் இதனைப் பல்வேறு பிரிவுகளாக வகைப்படுத்து கின்றனர்.
தொடர்ச்சியான சோகம் மற்றும் மனநிலை மாற்றங்களை ஏற்படுத்தும் மனச்சோர்வு மற்றும் பைபோலார் கோளாறுகள் ஒருபுறமிருக்க, தீவிர பயம் மற்றும் கவலையை ஏற்படுத்தும் பொதுவான பதற்றம் மற்றும் சமூகப் பயம் போன்ற பதற்றக் கோளாறுகளும் மக்களைப் பெரிதும் பாதிக்கின்றன.




