குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் கடந்த 2005ம் ஆண்டு பல்வேறு குற்ற சம்பவத்தில் ஈடுபட்டதாக ஹேமந்த் நாகின்தாஸ் மோடி என்பவரை போலீசார் கைது செய்தனர்.
கொலை வழக்கில் கைதாகி ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட மோடிக்கு கடந்த 2014ம் ஆண்டு 30 நாள் பரோல் வழங்கப்பட்டது. வெளியே வந்த மோடி, தனது அடையாளத்தை முழுவதுமாக மாற்றிக்கொண்டு தொலைக்காட்சித் தொடர்கள் மற்றும் திரைப்படங்களில் நடித்து வந்துள்ளார்.
இந்நிலையில், தலைமறைவான மோடியை 12 ஆண்டுகளுக்கு பின்பு போலீசார் கைது செய்து மீண்டும் சிறையில் அடைத்தனர்.




