சிஜில் பெலஜரன் மலேசியா (SPM) 2025 தேர்வில் தேர்ச்சி பெற்ற மொத்தம் 169,803 மாணவர்களுக்கு பொது உயர் கல்வி நிறுவனங்களில் (IPTA) இடங்கள் வழங்கப்பட்டுள்ளன. UPUOnline அமைப்பு மூலம் பெறப்பட்ட மொத்த 235,480 விண்ணப்பங்களில், இந்த எண்ணிக்கை 72.11% ஆகும் என்று உயர் கல்வி அமைச்சு இன்று வெள்ளிக்கிழமை (மே 22) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
மொத்தத்தில், 91,357 விண்ணப்ப தாரர்களுக்கு அரசுப் பல்கலைக் கழகங்களிலும், 60,947 பேருக்கு பாலிடெக்னிக்குகளிலும், 15,844 பேருக்கு சமுதாயக் கல்லூரிகளிலும், மற்றும் 1,655 பேருக்கு மாரா உயர் கல்விப் பிரிவின் கீழ் உள்ள நிறுவனங்களிலும் இடங்கள் வழங்கப்பட்டன. “மேலும், 701 மாற்றுத்திறனாளிகள், 310 பழங்குடியினர், 179 விளையாட்டு வீரர்கள், மற்றும் B40 பிரிவைச் சேர்ந்த 10,499 விண்ணப்பதாரர்களுக்கு அமைச்சு சிறப்பு வழிகளை வழங்கியுள்ளது,” என்று அது கூறியது.
சமூக நலத்துறையின் கீழ் உள்ள நிறுவனங்களைச் சேர்ந்த 65 விண்ணப்பதாரர்களுக்கு IPTA-வில் இடங்கள் வழங்கப்பட்டதாகவும் அமைச்சு தெரிவித்தது. “8 ‘A’ மற்றும் அதற்கு மேற்பட்ட சிறந்த முடிவுகளைப் பெற்ற விண்ணப்பதாரர் களுக்கும் அமைச்சகம் இடங்களை வழங்கியுள்ளது,” என்று அது கூறியது.
இந்த ஆண்டு மொத்தம் 363 கல்வித் திட்டங்கள் வழங்கப்பட்டன; இதில் 41 சான்றிதழ் நிலை, 57 அடிப்படை, 264 பட்டயப் படிப்புகள் மற்றும் ஒரு இளங் கலைப் பட்டம் ஆகியவை அடங்கும். மேலும், இடம் கிடைக்காத விண்ணப்ப தாரர்கள், இன்று நண்பகல் முதல் மே மாதம் மாலை 5 மணி வரை, 10 நாட்களுக்குள் UPUOnline மூலம் மேல்முறையீடு செய்யலாம் என்றும் அமைச்சு கூறியது.
“தகுதிவாய்ந்த அனைத்து விண்ணப்பதாரர்களும் அதிக தகுதி மதிப்பெண்ணிலிருந்து குறைந்த தகுதி மதிப்பெண் வரை தரவரிசைப் படுத்தப்பட்டு, தகுதி அடிப்படையிலான கொள்கையின்படி மாணவர் சேர்க்கை நடைபெற்றது




