இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை நேரத்தில், கோம்பாக் காராக் நெடுஞ் சாலையில் ஒரு கார் சிமென்ட் லாரியின் பின்புறத்தில் மோதியதில் மூன்று இளைஞர்கள் உயிரிழந்தனர், ஒரு பெண் படுகாயமடைந்தார்.
அதிகாலை , காம்போங் சுங்கை சின்சின் அருகே காராக் நெடுஞ்சாலையில் அவர்கள் பயணித்த கார் சிமென்ட் லாரியின் பின்புறத்தில் மோதியதில் இந்த கோர விபத்து நடந்தேறியது
சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் செயல்பாடுகளுக்கான உதவி இயக்குநர் அஹ்மத் முக்லிஸ் மொக்தார், அதிகாலை சுமார் 2.07 மணியளவில் இந்த மோதல் குறித்து அவசர சேவைகளுக்கு ஒரு உதவி அழைப்பு வந்ததாகக் கூறினார்.
ஒருவருக்கு தலையில் பலத்த காயங்களும், இடது காலில் எலும்பு முறிவும் ஏற்பட்டது. அதே சமயம், இருபது வயதுகளில் இருந்த மூன்று ஆண்கள் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது,” என்று அவர் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார்.
பலத்த சேதமடைந்த வாகனத்திலிருந்து அனைத்துப் பாதிக்கப்பட்டவர்களையும் மீட்புக் குழுவினர் வெளியேற்றி, மேலதிக நடவடிக்கைகளுக்காக மலேசிய சுகாதார அமைச்சு பணியாளர்களிடம் ஒப்படைத் தனர். மோதலுக்கான காரணம் குறித்த விசாரணைகள் தொடர்வதால், உயிரிழந்தவர்களின் அடையாளங்கள் இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப் படவில்லை




