போதைப்பொருள் வாங்குவதற்காகப் பணம் தர மறுத்ததால், சரடோக்கின் கிரியான் பகுதியில் தனது மனைவி யைக் காயப்படுத்தும் அளவுக்குத் தாக்கியதாக நம்பப்படும் ஒருவரைக் காவல்துறை கைது செய்துள்ளது.
பாதுகாவலராகப் பணிபுரியும் பாதிக்கப்பட்ட பெண், மே 21 அன்று தனது 26 வயது கணவரால் தாக்கப் பட்டதைத் தொடர்ந்து காவல் நிலையத்தில் புகார் அளித்ததாக சரடோக் மாவட்டக் காவல் தலைவர், துணை கண்காணிப்பாளர் மேத்யூ மாங்கி கூறினார்.
போதைப்பொருள் வாங்குவதற்காகக் கேட்கப்பட்ட RM30-ஐ பாதிக்கப்பட்ட பெண் தர மறுத்ததால், சந்தேக நபர் ஆக்ரோஷ மாக நடந்துகொண்டதாக அவர் கூறினார்.
“இந்தச் சம்பவத்தின் விளைவாக, பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு இரு புருவங்களிலும் இடது கன்னத்திலும் காயம் ஏற்பட்டது.
“கிடைத்த புகாரைத் தொடர்ந்து, காவல்துறை விசாரணை நடத்தி, சந்தேக நபரைக் கைது செய்தது. அவர் சரணடைந்தார்,” என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
அந்தத் தம்பதியினருக்கு 2020-ல் திருமணம் நடந்ததாகவும், அவர்களுக்கு ஐந்து வயது மகள் இருப்பதாகவும் அவர் கூறினார்.
பாதிக்கப்பட்டவர் தனது கோரிக்கையை ஏற்க மறுத்ததால் சந்தேக நபர் அதிருப்தி அடைந்ததாகவும், அதன் பிறகு அப்பெண்ணின் முகத்திலும் முதுகிலும் பலமுறை தாக்கியதாகவும் நம்பப்படுகிறது என்று அவர் கூறினார்.
“சிறுநீர் பரிசோதனையின் முடிவுகளில், சந்தேக நபருக்கு ஆம்பெடமைன் மற்றும் மெத்தம்பெடமைன் இருப்பது கண்டறியப்பட்டது.
“இந்த வழக்கு தண்டனைச் சட்டத்தின் பிரிவு 323 மற்றும் குடும்ப வன்முறைச் சட்டத்தின் பிரிவு 18A ஆகியவற்றின் கீழ் விசாரிக்கப்பட்டு வருகிறது,” என்று அவர் கூறினார்




