Vimarsagan Media

Home » Malaysia » கோல கிராய் கார் விபத்து:- ஒரு பெண் உயர் , இரு குழந்தை உட்பட ஐவர் காயம்

கோல கிராய் கார் விபத்து:- ஒரு பெண் உயர் , இரு குழந்தை உட்பட ஐவர் காயம்

இன்று காலை, கால்டெக்ஸ் லலோ பெட்ரோல் நிலையம் அருகே டொயோட்டா ஆல்ஃபார்ட் மற்றும் பெரோடுவா பெஸா கார்கள் மோதிக்கொண்ட விபத்தில், ஒரு பெண் உயிரிழந்தார். மேலும், இரண்டு குழந்தைகள் உட்பட ஐந்து பேர் காயமடைந்தனர்.

இந்தச் சம்பவத்தில், பெரோடுவா பெஸா காரில் பயணித்த 52 வயதான சஃபினாஸ் ராஸ்மி, சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக மலேசிய சுகாதார அமைச்சு (KKM) உறுதிப்படுத்தியுள்ளது.

கோல கிராய் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தின் (BBP) தலைவர் மற்றும் உதவித் தீயணைப்புக் கண்காணிப் பாளர் (PPgB) நிக் அஹ்மத் அஃப்ஷாம் நிக் பா கூறுகையில், காலை 7.18 மணிக்கு NG999 எண் வழியாகத் தமக்கு அவசர அழைப்பு வந்ததாகவும், அதைத் தொடர்ந்து குவாலா கிராய் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தைச் (BBP) சேர்ந்த ஏழு பேர் சம்பவ இடத்திற்கு விரைந்த தாகவும் தெரிவித்தார்.

“காலை 7.44 மணிக்கு சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வாகனங்கள், டொயோட்டா ஆல்ஃபார்ட் மற்றும் பெரோடுவா பெஸ்ஸா கார்கள் மோதிக்கொண்ட விபத்தைக் கண்டன.”

Scroll to Top