Vimarsagan Media

Home » World » இந்தியர்களை சுற்றி சுற்றி அடிக்கும் நாடுகள்… அடுத்த ஆப்பு வைத்த நியூசிலாந்து; ஜூன் 1-ம் தேதி முதல்

இந்தியர்களை சுற்றி சுற்றி அடிக்கும் நாடுகள்… அடுத்த ஆப்பு வைத்த நியூசிலாந்து; ஜூன் 1-ம் தேதி முதல்

நியூசிலாந்து அரசு தனது விசா விதிமுறைகளில் இரண்டு மிக முக்கியமான அதிரடி மாற்றங்களை அறிவித்துள்ளது. இந்த புதிய விதிகள் வரும் ஜூன் 1-ம் தேதி முதல் அதிகாரப்பூர்வமாக அமலுக்கு வருகின்றன. குறைந்த அளவிலான பணிகளுக்குச் செல்பவர்களுக்கு ஆங்கில அறிவு கட்டாயமாக்கப்பட்டுள்ள அதே வேளையில், பெரும் பணக்கார முதலீட்டாளர்களுக்கு ஒரு சூப்பரான சலுகையும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை தங்குமிடம் மற்றும் வர்த்தகம் சார்ந்த சில சாதாரணப் பணிகளுக்கு ஆங்கில அறிவு பெரிதாகக் கட்டாயமாக்கப்படவில்லை. ஆனால், ஜூன் 1 முதல் இந்த நிலை மாறுகிறது. உணவகங்கள் மற்றும் பிற வர்த்தகத் தொழில்களில் பணிபுரிய வரும் வெளிநாட்டினரும் இனி அன்றாடத் தேவைக்கான அடிப்படை ஆங்கில அறிவைப் பெற்றிருக்க வேண்டும்.

தொழிலாளர்கள் தங்களின் உரிமைகளைப் புரிந்துகொள்ளவும், சமூகத்தோடு இணைந்து செயல்படவும் இந்த விதிமுறை அவசியம் என்று நியூசிலாந்து குடியேற்றத்துறை அமைச்சர் எரிகா ஸ்டான்ஃபோர்ட் தெரிவித்துள்ளார்.

குளோபல் வொர்க்ஃபோர்ஸ் சீசனல் விசா’ மற்றும் ‘பீக் சீசனல் விசா’ மூலம் தற்காலிகமாகப் பணிக்கு வருபவர்களுக்கு ஆங்கில அறிவு தேவையில்லை. ஏற்கனவே நியூசிலாந்தில் முறையான விசாவுடன் இருப்பவர்கள் இதனால் பாதிக்கப்படமாட்டார்கள். தற்போது விசா வைத்திருந்து, அவர்களின் விசா காலம் டிசம்பர் 1-ஆம் தேதி அல்லது அதற்கு முன்பாக முடிவடையும் பட்சத்தில், அவர்கள் அடுத்த விசாவுக்கு விண்ணப்பிக்கும்போது இந்த விதியிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.

Scroll to Top