பெட்டாலிங் ஜெயாவில் 500 படுக்கைகள் கொண்ட அரசு மருத்துவமனை கட்டுவதற்கான இடத்தை சுகாதார அமைச்சு ஒப்புக்கொண்டுள்ளது என்று சிலாங்கூர் மந்திரி பெசார் அமிருதின் ஷாரி தெரிவித்தார்.
மத்திய மற்றும் மாநில அமைப்புகள் மற்றும் சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகள் கலந்துகொண்ட மே 14 ஆம் தேதி கூட்டத்தில் இந்த இடம் முன்மொழியப்பட்ட பிறகு, சுகாதார அமைச்சர் சுல்கெஃப்லி அகமது இதற்கு ஒப்புதல் அளித்துள்ளார் என்று அமிருதின் கூறினார்.
சுகாதார அமைச்சால் ஏற்றுக்கொள்ளப் பட்ட இந்த இடம், குறிப்பாக அணுகல், கொள்ளளவு, நிலச் செலவுகள் மற்றும் உள்ளூர் மக்களிடமிருந்து உள்ள தூரம் ஆகியவற்றின் அடிப்படையில் பெட்டாலிங் ஜெயா குடியிருப்பாளர் களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும்.
“பெட்டாலிங் ஜெயா மருத்துவமனை யானது, அம்பாங் மருத்துவமனையைப் போன்ற ஒரு செங்குத்து வடிவமைப்பு முறையைப் பின்பற்றும். இது சுகாதார அமைச்சகத்திற்கான செலவுகளைக் குறைக்கும் அதே வேளையில், ஒரு சிறிய நிலப்பரப்பில் மருத்துவமனை யைக் கட்டவும் வழிவகுக்கும்,” என்று அவர் ஒரு அறிக்கையில் கூறினார்.




