புதிய சமூகச் சேவைக் கட்டப்பின்கீழ் ஆறு மாநிலங்களில் குப்பை போட்ட ஏறக்குறைய 8,000 பேருக்கு குப்பைகளை அகற்றும் சமூகப் பணி தண்டனையாக வழங்கப்பட்டது.
இந்தச் சமூக சேவைத் திட்டத்தை பிற மாநிலங்களும் பின்பற்ற வேண்டும் என்று அமைச்சர் இஙா கோர் மிங் வலியுறுத்தியுள்ளார். அத்திட்டம், இவ்வாண்டு அறிமுகப் படுத்தப்பட்ட பிறகு கூட்டரசு ,பிரதேசம் புத்ராஜெயா, சிலாங்கூர், நெகிரி செம்பிலான், ஜோகூர், கிளந்தான் உள்ளிட்ட ஆறு மாநிலங்களில் ஏறக்குறைய 7,919 பேர் பிடிபட்டனர்.
இதற்கிடையே பெர்லிஸ், கெடா, பினாங்கு, பாஹாங், திரங்கானு, மலாக்கா, சாபா, சரவாக், லபுவான் (கூட்டரசுப் பிரதேசம்) ஆகியவை இன்னும் புதிய முறையை ஏற்றுக் கொள்ளவில்லை. இருந்தாலும் மத்திய அரசாங்க நிலையில் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
திடக்கழிவு மற்றும் பொதுத் தூய்மை நிர்வாகச்சட்டம் 2007 (சட்டம் 672)-இன் கீழ் அமல்படுத்தப்படும் சமூக சேவை ஆணை, குப்பைகளை வீசும்போது பிடிபடும் நபர்கள் சீர்திருத்தத் தண்டனையாகச் சமூக சேவை செய்ய வேண்டும் என்று குறிப்பிடுகிறது.
குற்றவாளிகளுக்கு 2,000 ரிங்கிட் (S$642.90) வரை அபராதம் விதிக்கப்படலாம். மேலும் நீதிமன்றங்கள் ஆறு மாதங்கள் வரை சமூக சேவையை நீட்டிக்க வாய்ப்புள்ளது. இதில் மொத்தம் 12 மணி நேரம் வரை வேலை செய்ய வேண்டியிருக்கும்.




