Vimarsagan Media

Home » India » ஜேசன் சஞ்சய் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமாகி இயக்கிய ‘சிக்மா’ . ஜூலையில் வெளியீடு

ஜேசன் சஞ்சய் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமாகி இயக்கிய ‘சிக்மா’ . ஜூலையில் வெளியீடு

தமிழக முதல்வர் ஜோசப் விஜயின் மகன், ஜேசன் சஞ்சய் தற்போது தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமாக உள்ளார். இவர் முதன்முதலாக இயக்கியுள்ள படத்திற்கு ‘சிக்மா’ எனப் பெயரிடப்பட்டுள்ளது.

இதில், சந்தீப் கிஷன் கதாநாயகனாக நடித்துள்ளார். மேலும், ஃபரியா அப்துல்லா, ராஜு சுந்தரம், சம்பத் ராஜ், அன்பு தாசன், ஷீலா ராஜ்குமார் உள்ளிட்டோர் முக்கிய கதாப்பத்திரதில் நடித்துள்ளனர்.

லைகா’ மற்றும் ’ஜே.எஸ்.ஜே மீடியா’ ஆகிய நிறுவனங்கள் இணைந்து இப்படத்தைத் தயாரித்துள்ளன. தமன் இப்படத்திற்கு இசையமைத்து வருகிறார். ஆக்சன் பின்னணியில் உருவாகியுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்த நிலையில், வெளியீட்டுத் தேதியும் அறிவிக்கப் பட்டுள்ளது. அதாவது, வருகின்ற தேதி சிக்மா படம் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜேசன் சஞ்சயின் தந்தை விஜய் தமிழ் சினிமாவின் மிக உச்ச நடிகராக இருந்தவர். அதே போல, அவரது தாத்தா எஸ்.ஏ.சந்திர சேகர் தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. சினிமா பின்னணியைக் கொண்ட ஜேசன் சஞ்சயின் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்திற்கு, தமிழ் திரை ரசிகர்களி டையே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Scroll to Top